Home /News /madurai /

பிட்டுக்கு மண் சுமந்த லீலை - இரண்டாண்டுக்கு பின்னர் திரளான  பக்தர்கள் தரிசனம்

பிட்டுக்கு மண் சுமந்த லீலை - இரண்டாண்டுக்கு பின்னர் திரளான  பக்தர்கள் தரிசனம்

மதுரை சொக்கநாதர்  - பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை சொக்கநாதர் - பிட்டுக்கு மண் சுமந்த லீலை

Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான்று சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை, தொடர்ந்து ஆக.29 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும். ஆக.29 - கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆக.30 - நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆக.31 - மாணிக்கம் விற்றல், செப்.1 - தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்.2 - உலவாக்கோட்டை அருளியது, செப்.3 - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு, செப்.4 - வளையல் விற்றல், செப்.5 - நரியை பரியாக்கியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்றன.

 

ஆவணி மூலத் திருவிழாவின் 9 ஆம் நாளான்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வு நடைபெற்றது. மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில், சுவாமி வேடமணிந்த சிவாச்சாரியாரும், மன்னர் வேடமணிந்த சிவாச்சாரியாரும் சொக்கநாதர் பிட்டுக்காக பிரம்படி பட்டு மண் சுமந்த லீலையை நிகழ்த்தி காட்டினர்.

வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு ஒருவருமில்லை. இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் தன் பங்கு கரையை அடைக்காமல் பிட்டை உண்டு, ஆடிப்பாடி கடம்ப மரத்தின் அடியில் ஆழ்ந்த துயில் கொண்டார் சொக்கநாதர். பணிகளை பார்வையிட வந்த பாண்டிய மன்னன், பணி செய்யாமல் உறங்கிக் கொண்டிருந்த சொக்கநாதர் முதுகில் தன் கையிலிருந்த பிரம்பால்  அடிக்க, அந்த அடியின் வடு உலக உயிர்கள் அனைத்தின் முதுகிலும் விழுந்தது.

அரசன் உண்மையை உணர்ந்தான். இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும் வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு திருவிளையாடல் நிகழ்த்தியதாக மன்னனுக்கு உரைத்தார்.

Also see... தமிழகத்தில் செப்டம்பர் 3வது வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்ட இந்த லீலையை, கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காண முடியாமல் ஏங்கிய பக்தர்கள் இந்தாண்டு திரளாக பங்கேற்று கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Madurai

அடுத்த செய்தி