ஹோம் /நியூஸ் /மதுரை /

பசும்பொன் தேவர் குருபூஜை : விதிமுறைகளை மீறியதாக 329 பேர் வழக்குப்பதிவு

பசும்பொன் தேவர் குருபூஜை : விதிமுறைகளை மீறியதாக 329 பேர் வழக்குப்பதிவு

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

Pasumpon Muthuramalinga Thevar guru poojai: விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கனவே எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi, India

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115- வது ஜெயந்தி விழா மற்றும் 60- வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு 2000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

' isDesktop="true" id="828018" youtubeid="gLdaLt-8iiI" category="madurai">

விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கனவே எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இதையும் வாசிக்க12 பேருக்கு சம்மன்.. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் புலனாய்வுக்குழு முக்கிய முடிவு! 

இந்த நிலையில் நேற்றய தினம் விதிமுறைகளை மீறி கார் மற்றும் இருசக்கர வாகங்களில் சென்றதாக மதுரை மாநகர் பகுதியில் 257 பேர் புறநகர் பகுதியில் 62 பேர் என மொத்தமாக 329 பேர் மீது காவல்துறையினரால் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by:Salanraj R
First published:

Tags: Muthuramalinga Thevar, Thevar Jayanthi