முகப்பு /செய்தி /மதுரை / ”தப்பு பண்ணா அடிங்க...”- மகனை பள்ளியில் சேர்த்தபோது உறுதிமொழி கொடுத்த பெற்றோர் - மதுரையில் சுவாரஸ்யம்!

”தப்பு பண்ணா அடிங்க...”- மகனை பள்ளியில் சேர்த்தபோது உறுதிமொழி கொடுத்த பெற்றோர் - மதுரையில் சுவாரஸ்யம்!

பிரம்பு கம்புடன் உறுதிமொழி கொடுத்த பெற்றோர்

பிரம்பு கம்புடன் உறுதிமொழி கொடுத்த பெற்றோர்

Madurai News : மதுரையில் புதிதாக பள்ளியில் தனது மகனை சேர்த்தபோது பிரம்பு கம்புடன் உறுதிமொழி பத்திரத்தை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதியினரின் மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை இன்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.

மாணவர் சேர்க்கையின்போது 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். அப்போது, தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்.

ஆசிரியர்கள் கண்டிப்பில்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Madurai