ஹோம் /நியூஸ் /மதுரை /

பழனி குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்.. நீதிமன்றத்தில் தகவல் சொன்ன தமிழக அரசு!

பழனி குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்.. நீதிமன்றத்தில் தகவல் சொன்ன தமிழக அரசு!

கோப்பு படம்

கோப்பு படம்

Palani murugan temple kumbabishegam | பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani | Madurai

பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27 ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் முதன்மையாக , சமஸ்கிருத மொழி மந்திரங்களுக்கு இணையாக , தமிழ் மொழி மந்திரங்களை பயன்படுத்தி குட முழுக்கு விழா நடைபெறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனிக் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக கரூரை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில், தமிழ் மொழி மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணக்குமார், விஜயக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், தமிழ் கடவுளான முருகன் கோயிலில் தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு நடைபெறும் என தகவல் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், பழனி முருகன் குடமுழுக்கின் போது, தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

First published:

Tags: Local News, Madurai High Court, Palani Murugan Temple