ஹோம் /நியூஸ் /மதுரை /

திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு... 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!

திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு... 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!

சாலை விபத்து

சாலை விபத்து

Madurai | திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சமயநல்லூரை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் சங்கர். இவர் இன்று விடுமுறை என்பதால் திருமங்கலம் அருகே மேல உரப்பனூரில் உள்ள தனது நண்பர் சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

  பின்னர் இரு சக்கர வாகனத்தில் சங்கர் மற்றும் அவரது நண்பர் சிவகுமார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் நண்பர் சிவன்ராஜ் ஆகிய 3 பேரும் திருமங்கலத்தை அடுத்துள்ள செங்குளம் விலக்கிலிருந்து தேசிய நான்கு வழி சாலையை கடக்க முற்பட்டபோது மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டனர். அதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.

  சங்கர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். சிவக்குமார் மற்றும் சிவன்ராஜ் இருவரும் பலத்த காயத்துடன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  Also see... சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..!

  இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களைப் பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: சிவக்குமார், மதுரை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Madurai, Road accident