Home /News /madurai /

சொத்துகளை விற்க போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்த பேரன், மருமகளை கண்டித்து மூதாட்டி தர்ணா...

சொத்துகளை விற்க போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்த பேரன், மருமகளை கண்டித்து மூதாட்டி தர்ணா...

தர்ணாவில் ஈடுப்பட்ட மூதாட்டி

தர்ணாவில் ஈடுப்பட்ட மூதாட்டி

உயிரோடு இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை அபகரிக்க மருமகளும் பேரனும் மோசடி செய்வதாக கூறி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார்.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி இறந்து போன தனது மகன் வாரிசு சான்றிதழில் தன்னையும் இறந்ததாக கூறி போலியாக சான்றிதழ் தயார் செய்து சொத்துக்களை விற்க முயல்வதாக கூறி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாட்ஷா ராவுத்தர் இவர் மனைவி பாத்திமா பீவி. இவர்களுக்கு நான்கு மகன் இரண்டு மகள்கள் பிறந்ததில் தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் உயிரிழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத. இதில் பாட்ஷாராவுத்தரும் இறந்த 40 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    தற்போதுள்ள சூழலில் பாத்திமா பீவியின் மூத்த மகன் இப்ராஹிம்ஷா கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இப்ராஹிம்ஷாவின் தந்தையான பாட்ஷா ராவுத்தருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் அம்மாவின் சகோதரர்கள் சம்மதத்துடன் மூத்த மகனான இப்ராஹிம்ஷா பெயருக்கு ஏற்கனவே மாற்றி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு  சொத்துக்களை விற்கும் போது சொத்துக்களை வாங்குபவர் ஆவணங்களை சரிபார்த்துள்ளார். அப்போது இப்ராகிம்ஷா வாரிசு சான்றிதழில் அவருடைய தாய் தந்தையர் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதைப் பார்த்து உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக பதிவு செய்யப்பட்டது தொடர்பாக  பாத்திமா பீவியிடம் தகவல் தெரிவித்துள்னர்.

    Also see... அரசு பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி...

    அதன் பின்னரே பாத்திமா பீவி அப்போதைய வட்டாட்சியரிடம் உயிரோடு இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி தனது மருமகள் ராவியா பேகம் 54, பேரன் பாட்ஷா கனி 35 இருவரும் சேர்ந்து போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்துள்ளதாகவும் எனவே வாரிசு சான்றிதழில் தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் புகார் அளித்தும் வட்டாட்சியர் இது குறித்து நடவடிக்கையை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாத்திமா பேபி வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மூலம் 8 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி வட்டாட்சியருக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் இந்த உத்தரவு தொடர்பாக பேரையூர் வட்டாட்சியர் ரவி கடந்த ஏழு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய பாத்திமா பீவி நீதிமன்றம் உத்தரவிட்டும் வயதான தன்னை அலைக்கழிப்பு செய்வதாகவும் விசாரணையில் கேட்கக் கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

    Also see... மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் படங்கள்!

    இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமா பீவி, இறந்து போன தனது மகன் வாரிசு சான்றிதழில் தன்னை இறந்து விட்டதாக கூறி சொத்துக்களை அபகரிக்க தனது மருமகளும், பேரனும் முயல்வதாகவும் எனவே போலியான வாரிசு சான்றிதழை ரத்து செய்துவிட்டு தன்னுடைய பெயரை இணைத்து வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறினார்.

    Also see... பாலியல் தவறுகள் நடந்தால் மாணவிகள் காவல்துறையை அணுக வேண்டும்...

    அதுமட்டுமல்லாமல் பல மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்தில்  முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க விட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் பாத்திமா பீவி  தெரிவித்தார்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Madurai, Property, Protest

    அடுத்த செய்தி