முகப்பு /செய்தி /மதுரை / ஊர்ந்து சென்று பதவியை பெற்றது யார் என்று ஊருக்கே தெரியும் - ஓபிஎஸ் விமர்சனம்

ஊர்ந்து சென்று பதவியை பெற்றது யார் என்று ஊருக்கே தெரியும் - ஓபிஎஸ் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம்

முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்துவிட்டால் அரசியல் இருந்து விலக தயார், நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விலக தயாரா என பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

அதிமுக விரைவில் நிச்சயம் ஒன்றிணையும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேவர் குருபூஜை - தங்க கவச விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு படி நடப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு விளக்கமளித்த அவர், முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியல் இருந்து விலக தயார் என்றும், நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விலக தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்களுக்கான நியாத்தை எப்போது தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தொண்டர்களை பற்றி எனக்கு தெரியும், என்னை பற்றி தொண்டர்களுக்கு தெரியும், உரிய நேரத்தில் உரிய முறையில் தொண்டர்களை அணுகுவேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிமுக ஒன்றிணையுமா என்ற கேள்விக்கு, நிச்சயம் ஒன்றிணையும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: EPS, Madurai, O Panneerselvam, OPS