Home /News /madurai /

Madurai : மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 2 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு.. எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

Madurai : மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 2 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு.. எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

மதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில் நிலையம்

Madurai District : ரயில் சேவையை அதிகரிக்கும் வகையில் தெற்கு ரயில்வே செய்துள்ள ஏற்பாடு மதுரை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    மூன்று முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் - மதுரை, கொல்லம்-புனலூர், கன்னியாகுமரி-ராமேஸ்வரம் வழித்தடங்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்கபடவுள்ளது.

    ராமேஸ்வரம் - மதுரை இடையிலான முன்பதிவில்லா பயணிகள் ரயில் நாளை (22ம் தேதி) இயக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் முன்பதிவில்லா ரயில்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

    ரயில் எண் 06652 கொண்ட ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. இதையடுத்து பிற்பகல் 02.40 மணிக்கு மதுரை வந்து சேருகிறது.

    மறுமார்கதில் 06653 என்ற எண் கொண்ட மதுரை - ராமேஸ்வரம் ரயில் நண்பகல் 12.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 04.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. இந்த ரயிலானது பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்படும்.

    இதைப்போலவே ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரத்திற்கு 3 நாட்கள் அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஜுன் 27 முதலும், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28 முதலும் இயக்கப்படவுள்ளது
    (22622) என்ற எண் கொண்ட இந்த ரயில்  ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரயிலில் 3 குளிர்சாதன வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

    இந்த இரு ரயில்களும் மதுரை வழித்தடத்தில் இயக்கபடவுள்ளதால் மதுரை மக்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது.

    செய்தியாளர் : அருண் பிரசாத், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Train

    அடுத்த செய்தி