Home /News /madurai /

Madurai: நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைகிறது!!

Madurai: நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைகிறது!!

கீழக்குயில்குடி

கீழக்குயில்குடி

Madurai District: மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நாகமலைக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் மூன்று ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை தெற்கு (TN58) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நாகமலை புதுகோட்டை யை அடுத்து உள்ள கீழக்குயில்குடியில் போக்குவரத்து கழகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (TN59) , மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம்(TN 64) மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்(TN58) என மொத்தம் 3 போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (TN58) தற்போது பழங்காநத்தம் - காளவசல் பைபாஸ் சாலையில் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் ஓட்டுநர்களுக்கான சோதனைக்களம் முறையாகவும் பெரியதாகவும் இல்லை என்று கூறப்பட்டு வந்ததால் சொந்த கட்டிடத்திற்க்கான இடம் தேர்வு நடைபெற்றது. எனவே இதற்கான பணிகளை போக்குவரத்து கழகம் மேற்கொண்டு தற்போது கீழக்குயில்குடியில் மூன்று  ஏக்கர் நிலமானது தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3.25 கோடி மதிப்பீட்டில் டெஸ்ட் ட்ராக் வசதியுடன் பெரிய அளவிலான அலுவலகம் அமைய உள்ளது.

    மதுரையை சுற்றி பல ஊராட்சிகளும், பேரூராட்சிகளும் உள்ளன, அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வாகன பதிவேட்டிற்காகவும், வாகனம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கும் நகருக்குள் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தற்போது கீழ்க்குயில்குடியில் போக்குவரத்து அலுவலகம் அமைந்தால் அது நகருக்கு வெளியில் வசிக்கும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    இந்த கட்டிட பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதைப்போலவே மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகமும் (TN64) அரசு விரைவு போக்குவரத்து கழக கட்டிடத்தில் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் எல்லை பகுதி நகருக்குள்ளேயே வருவதால் மதுரை நகருக்குள் இந்த அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

    செய்தியாளர் - அருண் பிரசாத், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி