ஹோம் /நியூஸ் /மதுரை /

கொரோனா தடுப்பூசி... பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா தடுப்பூசி... பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Madurai, India

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுபோது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இதனையடுத்து வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் கோவிட்-19 நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அரசின் விதிமுறைகளின்படி பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது.

 • மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்.
 • ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
 • நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 • அதே போல் மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
 • ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.
 • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 • அவர்கள் இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 • மேலும் மேற்காணும் ஜல்லிக்கட்டினை காண வரும் பொதுமக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 • பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கனை பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
 • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
 • எருது விடும் நிகழ்ச்சியில் வீரர்களுக்கு 150 அனுமதிக்கப்படுகிறது. அந்த எண்ணிற்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
 • தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றப்படவேண்டும்.
 • அதன்படி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப (Total capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் ஏது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவேண்டும்.
 • அந்த பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
 • நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
 • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோளா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
 • அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
 • வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.
 • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பினிபற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

First published:

Tags: Covid-19, Jallikattu, Madurai