Home /News /madurai /

தமிழருடைய தலைவிதியை நிமிர்த்திய கலைஞரின் பேனாவுக்கு சிலை வைப்பதே பொருத்தம் - தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழருடைய தலைவிதியை நிமிர்த்திய கலைஞரின் பேனாவுக்கு சிலை வைப்பதே பொருத்தம் - தமிழச்சி தங்கபாண்டியன்

கலைஞர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்ந்திருக்கிறது. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது சால பொருத்தமாகும்.

கலைஞர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்ந்திருக்கிறது. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது சால பொருத்தமாகும்.

கலைஞர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்ந்திருக்கிறது. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது சால பொருத்தமாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Madurai
கலைஞரின் கையெழுத்தால் ஒவ்வொரு முறையும் தமிழக மக்கள் தலை நிமிர்ந்துள்ளார்கள். அதனால் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை வைப்பது  பொருத்தமாக இருக்கும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எட்டு வழி சாலை என்ற பிரச்சனை வேற எத்தனை பசுமையான இடங்களை காவு கொடுத்து உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள் அதற்கும் இதற்குமான ஒத்த கருத்தை சரியாக வைக்க வேண்டும். மக்களுக்கான அரசு தான் இது, ஆகவே மக்களுடைய கருத்துக்களை கேட்ட பின்பு தான் முதல்வர் முன்னெடுத்துச் செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தெலுங்கானாவில் இந்த பிரச்சினை வந்தபோது கேஸ் சிலிண்டரில் மோடி படத்தை வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள். மத்திய அரசிடம் இருந்து மானியம் வந்தாலும் நமக்கான முக்கியமான ஒரு வகையிலே அனைவருக்கும் அந்த அரிசி சென்று சேர்கிறதா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் ஆகவே மத்திய அரசு ஒன்றிய அரசு மாநில அரசு என்ற எதுவும் இதில் கிடையாது. ஆனால் அரிசிக்கு மானியம் கொடுத்தாலும் அனாவசியமான விலை ஏற்றம் உள்ளது சுங்கவரி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்படி பல பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு சந்திக்க இருப்பதால் நாம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தார்.

ALSO READ | பாலியல் தொழிலில் போலீஸ் தொல்லை; பிளானை மாற்றி கொள்ளையடிக்கும் தொழிலுக்கு மாறிய கும்பல்!

பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தை நிதி சுமையை காரணம் காட்டி தள்ளி வைத்த முதல்வர் கலைஞரின் பேனா சிற்பத்திற்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் என பரவலாக குற்றச்சாட்டு  வருகிறது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நிதிச் சுமைக்காக அந்தத் திட்டத்தை முதல்வர் கைவிட வேண்டும் என சொல்லவில்லை. இப்போது இல்லை அடுத்ததில் கொண்டு வருவோம் என்று சொல்லி இருப்பார்கள். நினைத்து பாருங்கள் கலைஞருடைய பேனா எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றும், கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என முதன் முதலில் கையெழுத்து போட்ட பேனா கலைஞரின் பேனா. அவர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்ந்திருக்கிறது. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது என்பது சால பொருத்தமாகும் என பேசியுள்ளார்.

செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்
Published by:Anupriyam K
First published:

Tags: Madurai, Tamilachi ThangaPandian

அடுத்த செய்தி