Home /News /madurai /

பெண்களுக்கான ரூ.1000 திட்டம் நிறுத்தமா?தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

பெண்களுக்கான ரூ.1000 திட்டம் நிறுத்தமா?தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

பள்ளியில் ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | madurai
    நிதிச் சுமையை காரணம் காட்டி முதல்வர் எந்தத் திட்டத்தையும் நிறுத்தவில்லை, தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். கலைஞரின் கையெழுத்தால் ஒவ்வொரு முறையும் தமிழக மக்கள் தலை நிமிர்ந்துள்ளார்கள் அதனால் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை வைப்பது  பொருத்தமாக இருக்கும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

    மதுரை விமான நிலையத்தில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் பெண்களின் உயர் கல்வி திட்டத்திற்கான மாதந்தோறும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து உயர் கல்வியில் சேர விருப்பம் உடைய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற திட்டத்தை புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டமானது ஏற்கனவே முதலமைச்சருடைய கனவு திட்டங்களில் மிகப் பிரதானமாக இருந்த திட்டம். பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் அவருடைய வாழ்வு நிலை முன்னேறும் என்பதை கருத்தில் வைத்தே முதல்வர் பிற உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதோடு இணைந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும் இந்த தொகையானது அவர்களது உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாக விளங்குவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நம் தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கான  இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கலைஞரின் ஆட்சி பள்ளி கல்வியில் ஒரு பொற்காலம் என்றால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி உயர்கல்வித்துறையில் ஒரு பொற்காலம் என தெரிவித்தார்.

    ALSO READ | மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.300க்கு விற்பனை.. மழை, முகூர்த்த தினங்களால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

    மேலும், பள்ளி கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாவதாக குற்றச்சாட்டு வருகிறது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழச்சி தங்கபாண்டியன் இதை குற்றச்சாட்டாக கூற முடியாது ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது பொதுவெளியில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்க பள்ளி கல்வித்துறை முனைப்போடு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Madurai, Tamilachi ThangaPandian

    அடுத்த செய்தி