ஹோம் /நியூஸ் /மதுரை /

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

மு.க.அழகிரி

மு.க.அழகிரி

அழகிரி தரப்பினர் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து அளித்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தேர்தல் அதிகாரியைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகிரி தரப்பினர் வாக்குக்குப் பணப்பட்டுவாடா செய்வதாகக் கிடைத்த புகாரின் பேரில் மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் வீடியோ கேமராமேனுடன் சென்று வீடியோ எடுத்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அழகிரி தரப்பினர் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து அளித்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக அழகிரி உள்ளிட்ட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வழக்கு விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Court Case, Madurai, MK Alagiri