ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் வரும் மியாவாக்கி காடுகள்.. பச்சை பசுமையாக மாறவுள்ள நகரம்!

மதுரையில் வரும் மியாவாக்கி காடுகள்.. பச்சை பசுமையாக மாறவுள்ள நகரம்!

மதுரை மியாவாக்கி காடுகள்

மதுரை மியாவாக்கி காடுகள்

Madurai | மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் 62 சென்ட் இடத்தில் மினி மியாவாக்கி காடுகள் உருவாக்கப்படவுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் வரும் மியாவாக்கி காடுகளால் மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மியாவாக்கி காடுகள் இக்காலத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். காடுகளின் தேவை வெறும் மரத்திற்காகவே என்ற காலகட்டத்தில் இருந்து தற்போது காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த காலகட்டம் இது.

ஜப்பானின் தாவரவியலாளர் அகிரா மியாவாகியால் தோற்றுவிக்கப்பட்டதே மியாவாகி காடுகள். இப்பொழுது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மியாவாக்கி காடுகளை உருவாக்குவதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் கடந்த சில வருடங்களாகவே மியாவாக்கி காடுகளை உருவாக்கி வருகின்றார்கள். இந்நிலையில் கே.புதூர் பகுதியில் உள்ள சிட்கோவில் இருக்கும் சுமார் 62 சென்ட் காலி இடத்தில் 3000 மரக்கன்றுகளை வளர்த்துள்ளனர்.

இதற்காகவே கடந்த 20 நாட்களாக குப்பைகளை அகற்றுதல், மண்ணை சரி செய்தல், இயற்கை உரம் இடுதல் என மண்ணை தரமானதாக மாற்றி மினி மியாவாக்கி காடுகளுக்கான பணிகளை செய்துள்ளனர்.

இதில் மதுரை மேற்கு ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு கொய்யா, நாவல், புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டின் மரக்கன்றுகளை மியாவாக்கி காட்டிற்காக நடவு செய்தார்.

மேலும் இதில் ரோட்டரி சங்கத்தின் பிரசிடெண்ட் ராமநாதன்,செயலாளர் பொன்குமார் சிட்கோ இ.கோபாலகிருஷ்ணன், மடிச்சியா எம்.எஸ்.சம்பத், கப்பலூர் சிட்கோ கண்ணன் மற்றும் 13 நபர்களைக் கொண்ட மதுரை மேற்கு ரோட்டரி சங்கத்தினர் என ஏராளமானோர் இந்த மியாவாக்கி காடுகளை உருவாக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: யுவாதிகா, மதுரை.

First published:

Tags: Forest, Local News, Madurai