முகப்பு /செய்தி /மதுரை / பள்ளி குழந்தைகளுடன் சாப்பிட்டு செல்ஃபி எடுத்த உதயநிதி ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் குழந்தைகள்

பள்ளி குழந்தைகளுடன் சாப்பிட்டு செல்ஃபி எடுத்த உதயநிதி ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் குழந்தைகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Madurai | மதுரையில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து மாநகராட்சி பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்தினார்.

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3,185 குழந்தைகள் பயனடைந்து வந்த நிலையில், விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கூடுதலாக 21 அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் 26 நடுநிலை பள்ளிகள் என மொத்தமாக இந்த திட்டத்தின் 73 அரசு பள்ளிகளை சார்ந்த 8,702 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

இன்று நாராயணபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து உணவு தயாரிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின், குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு அருந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வுல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Local News, Madurai, Udhayanidhi Stalin