Home /News /madurai /

சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

PTR Palanivel Thiagarajan: சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை என தனது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்திவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பாஜகவினர் அவரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார். மகளிரணியைச் சேர்ந்த ஒருவர் வீசிய காலணி அமைச்சர் கார் மீது விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் உள்ளிட்ட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: செருப்புவீச்சு சம்பவம்: பாஜகவில் இருந்து சரவணன் விலகல்.. பிடிஆர்-ஐ சந்தித்து மன்னிப்புக் கோரினார்

    தனது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரரை நல்லடக்கம் செய்த இந்நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி