Home /News /madurai /

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண் உட்பட 3 பேர் கைது

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண் உட்பட 3 பேர் கைது

கார் மீது காலணி வீச்சு

கார் மீது காலணி வீச்சு

பாஜகவினர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் காரை மறித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பெண் ஒருவர் அவரது கார் மீது தனது காலணியை வீசினார். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் 3 பெண்கள் கைதாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் மூன்று பெண்கள் கைது. செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று முன் தினம் நடைபெற்றது. முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பிகொண்டிருந்தார். அப்போது, பாஜகவினர் அவரது காரை மறித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பெண் ஒருவர் அவரது கார் மீது தனது காலணியை வீசினார்.

இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் உள்ளிட்ட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. பத்திரமா இருக்கு வந்து வாங்கிட்டு போகலாம்.." அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

இந்த நிலையில்,  வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர். தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பதுங்கியிருந்த
சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூன்று பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் தனலட்சுமி வீசிய காலணிதான் அமைச்சரின் கார் மீது பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Murugesh M
First published:

Tags: BJP, Madurai, Minister Palanivel Thiagarajan

அடுத்த செய்தி