ஹோம் /நியூஸ் /மதுரை /

50,000 பேருக்கு சோறு போட்டேன்.. பையன் கல்யாணத்துக்கு ரூ.3 கோடிதான் செலவு.. அமைச்சர் மூர்த்தி ஆவேசம்..!

50,000 பேருக்கு சோறு போட்டேன்.. பையன் கல்யாணத்துக்கு ரூ.3 கோடிதான் செலவு.. அமைச்சர் மூர்த்தி ஆவேசம்..!

அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம்

அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம்

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார் முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும் - அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது மகனின் திருமணத்திற்கு ரூ. 3 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக  பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை விமர்சித்தும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, தற்பொழுது நடைபெறுவதுதான் சமூக நீதி திராவிட மாடல் ஆட்சி

நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும் என பேசினார்.

தனது மகன் திருமணத்தில் ஏழை எளிய மக்கள் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் சமமாக அமர வைத்து சாப்பாடு கொடுத்தேன். 50,000 பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்துள்ளேன். 30 கோடி செலவு செய்துள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி கணக்கர் வேலை பார்த்தாரா? எனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன் என விளக்கம் அளித்தார். கரும்பு, வாழை கட்டியது ஆடம்பரமா? திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் திருமண செலவு குறித்து ஆய்வு நடத்தி கொள்ளலாம்.

அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் உள்ளபோது திருமணத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்.எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார் முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும் என பேசிய அமைச்சர் மூர்த்தி,பத்திரப்பதிவு துறையில் கடந்த 16 மாதங்களில் 100 மடங்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு வனிகவரித்துறையில் ஆய்வு நடத்தியதுண்டா, அதிமுக ஆட்சியில் இரு துறைகளிலும் கவனம் செலுத்தவில்லை, வருவாய் ஈட்டவில்லை.

அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.

பத்திரப்பதிவு வணிகவரித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரில் விவாதம் செய்ய தயார். எடப்பாடி பழனிச்சாமி 10 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை லட்சம் கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

இதையும் படிங்க: தேவர் குருபூஜை - தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

எடப்பாடி பழனிச்சாமி இதை இல்லை என மறுக்க முடியுமா அதிகாரிகளை லஞ்சம் வாங்க பயன்படுத்தினார்.எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராகும் முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார், பொதுச்செயலாளர் பதவியை பெற எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார் அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்பது எங்களுக்கு தெரியும் என மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Published by:Arunkumar A
First published:

Tags: ADMK, DMK, EPS, Madurai