ஹோம் /நியூஸ் /மதுரை /

பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்... மதுரையில் சுவாரஸ்யம்

பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்... மதுரையில் சுவாரஸ்யம்

அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

Madurai News : அரசு பேருந்தில் பயணித்தபோது பொதுமக்களிடம் பேசி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு பேருந்தில் பயணம் தொண்டர்களுக்காக ரூ.510க்கு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டார்.

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் தத்தநேரி பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டு புதிய பேருந்து வழித்தடத்தை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேருந்தில் டிக்கெட் எடுத்த அமைச்சர்

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து பேருந்தில் ஏறி சிறிது தூரம் பொதுமக்களுடன் பயணம் மேற்கொண்டார். மேலும் அரசு பேருந்தில் பயணித்தபோது பொதுமக்களிடம் பேசி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதையும் படிங்க : கோயில் பொருள்களை திருடிய கும்பல் மீது தாக்குதல்.. 10வயது சிறுமி மரணத்துக்கு காரணம் யார்? - நடந்தது என்ன?

இந்நிலையில், அமைச்சருடன் பேருந்தில் பயணித்து வந்த திமுக தொண்டர்களுக்கு டிக்கெட் கேட்டு 510 ரூபாயை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து பேருந்து பயண சீட்டையும் நடத்துனரிடமிருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இதனைக்கண்டு திமுக தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Madurai, Minister Palanivel Thiagarajan