முகப்பு /செய்தி /மதுரை / 51ஆடு.. 100 சேவல்களை பலிகொடுத்து அன்னதானம்.. மதுரை மேலூரில் களைகட்டிய கறிவிருந்து..!

51ஆடு.. 100 சேவல்களை பலிகொடுத்து அன்னதானம்.. மதுரை மேலூரில் களைகட்டிய கறிவிருந்து..!

மாதிரி படம்

மாதிரி படம்

இதில் மேலூர், கூத்தப்பன்பட்டி, நாவினிபட்டி, வடக்கு நாவினிபட்டி, சத்தியபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மேலூர் அருகே கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு கமகம கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் 51 ஆட்டுகிடாய் மற்றும் 100க்கும் மேற்பட்ட சேவல்களை பலிகொடுத்து அன்னதான திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குநாவினிபட்டி – சத்தியபுரம் நான்கு வழிச்சாலை எதிரே தோப்புக்குள் இலந்தைமரத்தடியில் வீற்றிருக்கும் அருள்மிகு முத்துபிள்ளையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மாசி களரி விழா நடைபெற்றது. இதில் மேலூர், கூத்தப்பன்பட்டி, நாவினிபட்டி, வடக்கு நாவினிபட்டி, சத்தியபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் மருளாடி (சாமியாடி) பெண் ஒருவர் கோவில் பகுதியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த  மல்லிகை பூக்களில் சர்ப்பவடிவில் (நாகம்) ஆடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதனை தொடர்ந்து பக்தர்கள்  காணிக்கையாக கொடுத்த 51 ஆட்டுகிடாய்கள், 100 க்கும் மேற்பட்ட சேவல்களை பலிகொடுத்து அதனை அங்குள்ள தோட்டத்துக்குள்ளே சமைத்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கம கம கறிவிருந்து பரிமாறப்பட்டது. இதனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர்.

First published:

Tags: Local News, Madurai, Tamil News