முகப்பு /செய்தி /மதுரை / மதுபோதை தகராறில் கத்தியால் குத்தி கொத்தனார் கொலை.. மதுரையில் பயங்கரம்..!

மதுபோதை தகராறில் கத்தியால் குத்தி கொத்தனார் கொலை.. மதுரையில் பயங்கரம்..!

கொலையானவர், கைதானவர்

கொலையானவர், கைதானவர்

Madurai News : மதுரை திருமங்கலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி அடுத்த கே.உன்னிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(40), இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (44) என்பவரும், சரவணனும் உறவினர்கள் ஆவர். இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சரவணன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த பெரியசாமி, சரவணனிடம் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சமாதானமாகி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரியசாமி தான் சாவிக் கொத்தில் வைத்திருந்த கத்தியால் சரவணன் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Local News, Madurai