ஹோம் /நியூஸ் /மதுரை /

ஜாமீனில் வெளியே வந்தவர் முன்விரோத தகராறில் வெட்டிக்கொலை... மதுரையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

ஜாமீனில் வெளியே வந்தவர் முன்விரோத தகராறில் வெட்டிக்கொலை... மதுரையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

உயிரிழந்த பாரதிராஜா

உயிரிழந்த பாரதிராஜா

Madurai News | போலீசார் அவரை தேடி வந்த நிலையில் இன்று வழக்கறிஞர் மூலம் ஜாமீன் பெற்று டி.புதுப்பட்டிக்கு பாரதிராஜா வந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த போஸ் என்பவரது மகன் பாரதிராஜா(35). இவரது மனைவி முகிலா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பாரதிராஜாவிற்கும், அதே ஊரை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

  இதேபோல் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல் போடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாரதிராஜா தலைமறைவாகிவிட்டார்.

  இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் இன்று வழக்கறிஞர் மூலம் ஜாமீன் பெற்று டி.புதுப்பட்டிக்கு பாரதிராஜா வந்துள்ளார். வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் புதுப்பட்டி உள்ள டீக்கடை ஒன்றில் தனது நண்பர் சரவணகுமார் உடன் பேசிக்கொண்டிருந்தார்.

  இதையும் படிங்க : சவுக்கு சங்கர் மீண்டும் 4 வழக்குகளில் கைது

  அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பாரதிராஜாவை சரமாரியாக வெட்டியது. இதில் முகம், நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த கும்பல் பாரதிராஜா உடன் பேசிக்கொண்டிருந்த சரவண குமாரையும் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த சரவணக்குமார் மயங்கி விழுந்தார்.

  இதையடுத்து, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சரவணகுமாரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  சரவணக்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பாரதிராஜாவின் உடலை கைப்பற்றிய போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

  இதையும் படிங்க : இறந்த ராணுவ வீரருக்கு அரசு இழப்பீடு : பங்கு கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற மாமனார், கொழுந்தன்!

  தொடர்ந்து தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டி உள்ளிட்ட 6 பேர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் டி.புதுப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : சிவக்குமார் 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Madurai