ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை கிடா விருந்தில் துப்பாக்கிச் சூடு.. சிதறி ஓடிய கூட்டம்!

மதுரை கிடா விருந்தில் துப்பாக்கிச் சூடு.. சிதறி ஓடிய கூட்டம்!

மதுரை

மதுரை

மதுரை : கிடாய் விருந்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்ட போது துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்

 • News18 India
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் திருமங்கலம் அருகே டி கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் நேர்த்திக் கடனுக்காக கிடாய் விருந்து வைத்துள்ளார். தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் ரியல் எஸ்டேட் மூலம் பழக்கமான நண்பர்களை விருந்துக்கு அழைத்துள்ளார்.

  இந்நிலையில் விருந்திற்கு வந்த மதுரையைச் சேர்ந்த வேதகிரி என்பவருக்கும் குருட்டு கணபதி என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் வேதகிரி ஆத்திரத்தில் வேதகிரி காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட அங்கிருந்தவர்கள் துப்பாக்கி சூடுவதைக் கண்டு தப்பி ஓடி விட்டனர்.

  சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் தனசேகரன் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் சக்திவேல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வேதகிரி மற்றும் கணபதியை தேடி வருகின்றனர்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Gun fire, Madurai