ஹோம் /நியூஸ் /மதுரை /

ரீல்ஸ் மோகம்.. பீர் குடித்தவாறு பைக் சாகசம்.. மதுரையில் இளைஞர்கள் அட்டகாசம்

ரீல்ஸ் மோகம்.. பீர் குடித்தவாறு பைக் சாகசம்.. மதுரையில் இளைஞர்கள் அட்டகாசம்

மதுரையில் இளைஞர்கள் அட்டகாசம்

மதுரையில் இளைஞர்கள் அட்டகாசம்

Madurai News : மதுரையில் இரு சக்கர வாகனங்களை வரம்பு மீறி இயக்கியபடி நின்ற நிலையில் பீர் குடித்து அராஜக செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர்கள் சிலர் பீர் அருந்திக்கொண்டே பைக்கில் சாகசம் செய்தவாறு வீடியோ எடுத்தது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மதுரையில் அவ்வப்போது இளைஞர்கள் சிலர் சாலைகளில் விதிமீறல் செயல்களில் ஈடுபடுவது, பட்டாக் கத்தியுடன் போஸ் கொடுப்பது போன்ற வீடியோக்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்வதும் பின்னர் அவர்களை தேடிக் கண்டறிந்து காவல்துறை வழக்கு பதிவதும் அதிகரித்து வருகிறது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஷெனாய் நகர் சாலையில் இளைஞர்கள் சிலர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி நடந்தவாறும், இரு சக்கர வாகனங்களை வரம்பு மீறி இயக்கியபடி நின்ற நிலையில் பீர் குடித்தவாறும் அராஜக செயல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதல்.. பங்களா வீட்டில் குடித்தனம்.. பள்ளி மாணவியை கடத்தி சென்ற பைக் மெக்கானிக் கைது

பொது வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறும், அச்சமும் ஏற்படும் வகையில் செயல்பட்ட இந்த இளைஞர்கள் குறித்து அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் கவனித்து வழக்கு பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Madurai, Tamil News, Video