ஹோம் /நியூஸ் /மதுரை /

சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக மிரட்டல்.. மதுரையில் காதலன் உட்பட மூவர் போக்சோவில் கைது

சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக மிரட்டல்.. மதுரையில் காதலன் உட்பட மூவர் போக்சோவில் கைது

போக்சோவில் கைதான இளைஞர்கள்

போக்சோவில் கைதான இளைஞர்கள்

Crime News : மதுரையில் சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்த காதலன் உட்பட 3 இளைஞர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் காதல் என்ற போர்வையில் 17 வயது சிறுமியுடன் தனிமையில் இருப்பதை நண்பர்கள் மூலம் வீடியோவாக எடுத்து சிறுமியை ஏமாற்றி மிரட்டி பணம் பறிந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மங்கலம்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் மகன் சிவராமன் (வயது 21). இவருக்கும் மதுரையை சேர்ந்த 17வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு மலைப்பகுதிக்கு வருமாறு காதலன் அழைத்துள்ளார். காதலனை நம்பி சிறுமியும் சென்றுள்ளார். மலைப்பகுதியில் இருவரும் தனிமையில் இருந்தபோது காதலன் எல்லைமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் மர்ம நபர்கள் சிறுமியையும் அவரது காதலனையும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். வீடியோவை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த ரூ.30,000 மதிப்பிலான தங்கநகைகளையும் அந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் பணம் பறிக்கும் வேலையை தொடங்கியுள்ளனர். மானத்துக்கு பயந்த சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார். நாளுக்கு அவர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் காதலனின் நடவடிக்கையிலும் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடந்ததை பெற்றோரிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியை மிரட்டிய நபர்களான மேலவளவு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27), உத்தங்குடியை சேர்ந்த வினோத்குமார் (19) ஆகியோரை பிடித்து விசாரித்து மேற்கொண்டனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சிறுமியின் காதலனான சிவராமன் திட்டம் படியே இந்த மிரட்டல் நாடகம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Boy Friend, Crime News, Local News, Lovers, Madurai, POCSO case, Sexual abuse, Sexual harassment, Tamil News