மதுரையில் அரசியல், சினிமா, சுப,துக்க நிகழ்வுகள் சார்ந்து மட்டுமல்லாது செல்லப்பிராணிகள் காணாமல் போனதற்கான அறிவிப்புகளையும் போஸ்டர்களாக ஒட்டும் வழக்கம் உள்ளது.
தற்போது மதுரை பெரியார் பேருந்து நிலைய பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் வளர்த்து வந்த கோனூர் (Conure) இன செல்லப்பறவை ஒன்று காணாமல் போனதாகவும், அதை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போஸ்டர் ஒட்டியுள்ளார். பறவையின் அங்க அடையாளங்களுடன், அது தொலைந்த இடத்தையும், அவரது தொடர்பு விபரங்களையும் அதிலேயே குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன பறவை
"ஒன்றரை வருடங்களாக ஜோடியாக வளர்த்து வரப்பட்ட நிலையில், பெண் பறவை மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து பறந்து சென்று விட்டதாகவும், அதனால் அதன் இணையான ஆண் பறவை கவலையில் உணவு உண்ணாமல் தவித்து வருவதாகவும், பறவை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் எனும் எதிர்பார்ப்பில் வாசல் கதவை கூட அடைக்காமலேயே வைத்திருப்பதாகவும்" பறவையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்- போக்குவரத்துத்துறை விளக்கம்
அந்த காணாமல் போன ஒற்றை பறவையை காணவில்லை என மதுரை நகர் பகுதிகளில் பறவையின் உரிமையாளர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் காண்போர் கவனத்தை ஈர்த்துள்ளன.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.