Home /News /madurai /

Madurai | பராமரிப்பில்லாமல் வைகை ஆற்றை சூழ்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

Madurai | பராமரிப்பில்லாமல் வைகை ஆற்றை சூழ்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

மதுரை வைகை ஆறு

மதுரை வைகை ஆறு

Madurai | மதுரை மாவட்டத்தின் உள்வரும் வைகை ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் சரியான பராமரிப்பில்லாமல் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து ஆறு இருப்பதே தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையின் ஒரே நிலத்தடி நீர் ஆதாரம் வைகை ஆறு மட்டுமே. குடிநீருக்கும், பாசனத்துக்கும் மதுரை மட்டுமல்லாது தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் வைகை ஆற்றையே நம்பி உள்ளன. தற்போது திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூட அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்து, மழைநீரைச் சேமிக்க ஏற்பாடு செய்துவிட்டனர்.

இந்நிலையில் மதுரை மாநகருக்குட்பட்ட வைகை ஆற்றில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. அதனால், ஆற்றில் ஆகாய தாமரைச்செடிகள், சீமை கருவேல மரங்கள் ஆற்றின் வழித்தடங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஆற்று மணலில் கிடைத்த நீர் ஊற்றுகள் வறண்டு போய்விட்டன.

இதுகுறித்து பேசிய ஆற்றங்கரை வாசிகள், ‘மதுரையில் பெரும்பாலான இடங்களில் வைகை ஆறே தெரியாத அளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதன் வேர் 7 அடி வரை செல்கிறது. இந்த மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும். இந்த மரங்களை முறையாக அகற்றாவிட்டால் பரவிக்கொண்டே வரும்.

மதுரை வைகை ஆறு


மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அரைகுறையாக பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

அதனால், தற்போது மீண்டும் சீமைக்கருவேல மரம் வளர்ந்து காடு போல ஆக்கிரமித்துள்ளது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மரங்களை முழுமையாக அகற்ற முடியவில்லை. அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி விடும் என்றனர். வைகை நதி மதுரை ஊர்மக்கள் மட்டுமல்லாது சுற்றி உள்ள மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

மதுரையை சுற்றி உள்ள திருப்புவனம், இடைகாட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களின் விவசாயிகள் வைகை ஆற்றையே நம்பி உள்ளனர். எனவே அரசு மற்றும் பொதுப்பணி துறை சார்பில் கருவேல மரங்கள் மற்றும் ஆற்றை சூழ்ந்துள்ள குப்பைகளை மழைக்காலம் தொடங்கும் முன் வெகு விரைவாக அப்புரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி