தேனி மாவட்டம் வைகை அணை அதன் முழு கொள்ளவான 71 அடியில் 70 அடியை எட்டியதால் அணையில் இருந்து 3754 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மஞ்சளாறு அணையிலிருந்து 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வைகையாற்றில் வினாடிக்கு சுமார் 4,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது, வைகை ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also see... புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது
வைகை ஆற்றின் கரையோரம் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் வைகை கரையோரம் உள்ள சாலை போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flood alert, Madurai, Vaigai dam level