ஹோம் /நியூஸ் /மதுரை /

தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த டிரைவர் வெட்டி படுகொலை... மதுரை வாடிப்பட்டியில் பயங்கரம்!

தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த டிரைவர் வெட்டி படுகொலை... மதுரை வாடிப்பட்டியில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்டவர் - தேடப்பட்டு வரும் சிறுவன்

கொலை செய்யப்பட்டவர் - தேடப்பட்டு வரும் சிறுவன்

Vadipatti murder | மதுரை வாடிப்பட்டியில் தம்பி பாதயாத்திரைக்கு செல்வதால் அவருக்கு பதிலாக தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Vadipatti

மதுரை வாடிப்பட்டியில் தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த டிரைவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் உள்ள மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில்  சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்த சதீஷ் (30) பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சதீஷ் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்து இதற்காக தனது அண்ணனான கார் டிரைவர் மருதுபாண்டி என்பவரை தனக்கு பதிலாக தென்னந்தோப்பில் இருக்குமாறு சொல்லிவிட்டு பாதயாத்திரைக்கு புறப்பட்டார்.

மருது பாண்டியுடன் மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலை பார்ப்பதற்காக இங்கு தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பாதயாத்திரை செல்வதற்கு முன் தனது அண்ணனிடம் தகவல் சொல்லிவிட்டு செல்வதற்காக சதீஷ் தென்னந்தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது மருதுபாண்டி முகம் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருதுபாண்டியுடன் உடன் இருந்த 17 வயது சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Madurai, Murder