முகப்பு /செய்தி /மதுரை / 50-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம்... உசிலம்பட்டியில் பயங்கரம்!

50-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம்... உசிலம்பட்டியில் பயங்கரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai dogs killed | மதுரையில் நாய்களை கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Usilampatti, India

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் உரிமையாளர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபடி, நரியம்பட்டி  கிராமங்களில் நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை கும்பல் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு நாய்களை கொன்றுள்ளனரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Kills a street dog, Local News, Madurai, Usilampatti