Home /News /madurai /

மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று (செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து..

மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று (செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து..

மதுரை

மதுரை

Madurai Train | ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் (செப்.5 முதல் செப்.10 வரை) 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று (செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

    மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் (செப்.5 முதல் செப்.10 வரை) 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் ஆகியவை இன்று (திங்கள்கிழமை) முதல் முதல் ரத்து செய்யப்படுகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Madurai, Tamilnadu, Train

    அடுத்த செய்தி