ஹோம் /நியூஸ் /மதுரை /

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் - ஏர்வாடியில் இருந்து தப்பி வந்ததாக தகவல்!

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் - ஏர்வாடியில் இருந்து தப்பி வந்ததாக தகவல்!

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai

  திருமங்கலம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த 55 வயது முதியவரை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி அமைந்துள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாடில்லாத கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 55 வயது முதியவர் ஒருவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைந்திருந்ததால் இருட்டில் கிணறு இருப்பதை அறியாமல் தவறி உள்ளே விழுந்து விட்டார்.

  இதைகண்ட அருகில் இருந்த டீக்கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், கயிறால் கட்டப்பட்ட ஏணியை கொண்டு கிணற்றின் உள்ளே இறங்கி முதியவரை பத்திரமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  ALSO READ | திருமண பத்திரிக்கை கொடுப்பதுபோல் வீட்டில் நுழைந்து கொள்ளை... எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து நகைகளை திருடி சென்றனர்

  தொடர்ந்து போலீசார் அவர்களது உறவினர்களின் எண்ணை தொடர்பு கொண்டு மேற்கொண்ட விசாரணையில் அவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த பசீர் (55) என்பதும் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளது தெரியவந்தது. பசீர் எர்ணாகுளம் அருகே ஹோட்டல் நடத்தி வந்ததாகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஹோட்டல் கொரோனா காலத்தில் வியாபாரம் மிக மோசமான நிலைக்கு சென்றதால் வியாபாரம் நொடிந்து போனதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

  மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதால் அவரை கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். இந்நிலையில் பசீர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காப்பகத்தில் இருந்து தப்பி வந்துவிட்டதாகவும் அப்பகுதியில் இருந்த உறவினர்கள் மூலம் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: சிவக்குமார், மதுரை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Madurai, Police Rescued