ஹோம் /நியூஸ் /Madurai /

அக்னிபாத்: இந்துக்களை மோடி ஏமாற்றுகிறார்- திருமாவளவன்

அக்னிபாத்: இந்துக்களை மோடி ஏமாற்றுகிறார்- திருமாவளவன்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இந்து சமூகத்தினரால் நடத்தப்படுவதால் மோடி தலைமையிலான அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதையே காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இந்து சமூகத்தினரால் நடத்தப்படுவதால் மோடி தலைமையிலான அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதையே காட்டுகிறது எனவும் இந்துக்களை மோடி  ஏமாற்றுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தியாகி கக்கனின் 114வது பிறந்த தினத்தையொட்டி, மேலூர் அருகே தும்பை பட்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் அவரது நினைவு புகைப்படங்களை பார்வையிட்டார்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன்,

"அரசியலில் காமராஜரைப் போல் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து காட்டியவர் தியாகி கக்கன். அவர் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். தற்போது அவரது மணிமண்டபம் பல இடங்களில் சிதிலமடைந்தும், புகைப்படங்கள் பாதுகாக்கப்படாமலும் உள்ளது. அவரது மணிமண்டபத்தை புதுப்பிக்க முதல்வர் ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை முன் வைக்கப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என எல்லாவற்றையும் ஒருமைப்படுத்த பாஜக முயல்கிறது. இது நாட்டின் பண்முக தண்மையையும், அரசியல் சட்ட திட்டத்தையும், ஜனநாயகத்தின் ஒற்றுமையையும் சிதைப்பதற்கு வழிவகுக்கும் .இதனை கண்டித்து அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க: அக்னிபத்: ஆர்.எஸ்.எஸ். திட்டம் மறைமுகமாக உள்ளது - கி.வீரமணி

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எதிராக தற்போது பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் இந்து சமூகத்தினரால் முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை காட்டுகிறது. இந்துக்களை மோடி ஏமாற்றுகிறார். இந்த அக்னிபத் திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்.

மேலும் படிக்க: தமிழகத்திலும் அக்னிபத் போராட்டம்.. ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவி ஆக செயல்படுகிறார். அவர் சனாதன கொள்கைகளை பரப்புகிறார். ஆளுநர் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு. முழுநேர ஆர்எஸ்எஸ் வேலையை செய்ய தகுதி உடையவராக உள்ளார்’ என்று விமர்சித்தார். மேலும், குடியரசுத் தலைவராக , இதுவரை முஸ்லிம் மற்றும் பட்டியல் இனத்தவர் என பலர் இருந்துள்ள நிலையில், இதுவரை ஒரு கிருஸ்தவர் கூட குடியரசுத் தலைவராக ஆகவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவரை முன்மொழிய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Published by:Murugesh M
First published:

Tags: Agnipath, Thol. Thirumavalavan