ஹோம் /நியூஸ் /மதுரை /

திருப்பரங்குன்றத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கும் திருவாதிரை திருவிழா..

திருப்பரங்குன்றத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கும் திருவாதிரை திருவிழா..

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

Madurai News | திருப்பரங்குன்றத்தில் வரும் 28ஆம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்குவதையொட்டி விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Thiruparankundram

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் திருவாதிரை திருவிழா தொடங்குகிறது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது.

அந்த நாளன்று மூலவர் சத்யகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து மாணிக்கவாசகர் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி சிவச்சாரியார்களால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்படும். இதனை அடுத்து கோவில் திருவாச்சி மண்டபத்தை மாணிக்கவாசகர் சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதையும் படிங்க | நடுராத்திரியில் பரபர மீன் விற்பனை! மதுரையில் பேமஸ் ஆகும் மிட்நைட் மீன் மார்க்கெட்..!

அதனைத் தொடர்ந்து ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும். ஜனவரி 5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும்.

மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ர தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

இதையொட்டி நடராஜர் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்நிலையில் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றார்கள்.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai, Murugan temple, Thiruparankundram