முகப்பு /செய்தி /மதுரை / ”இப்போலாம் எம்.பிக்களுக்கு மரியாதையே இல்லை”... திருமாவளவன் கலகல பேச்சு..!

”இப்போலாம் எம்.பிக்களுக்கு மரியாதையே இல்லை”... திருமாவளவன் கலகல பேச்சு..!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

Madurai Thirumavalavan Speech | அனைவரும் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேரவேண்டும் என திருமாவளவன் பேச்சு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இல்ல விழாவில் பங்கேற்று விட்டு அதன் பின்  ‘திருமா படிப்பகம்’ என்ற நூலகத்தை திறந்து வைத்தார்.

நூலக திறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற பூஜையில் நிர்வாகிகள் தொண்டர்கள் சத்தம் எழுப்பியதால் அனைவரையும் அமைதியாக இருங்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் நிர்வாகி ஒருவரின் குழந்தையை மடியில் அமர வைத்திருந்த நிலையில் குழந்தை அழுதுக்கொண்டிருக்க குழந்தையை கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து பெற்றோரிடம் குழந்தையை கொடுங்கள் என  கொடுத்தார்.

தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றி திருமாவளவன், “முன்பெல்லாம் எம்.பினா உரிய மரியாதை இருக்கும். எம்.பி கடிதம் கொடுத்தால் அதற்கு மரியாதை இருக்கும். கடிதம் கொடுத்தால் BSNL தொலைபேசி இணைப்பு கிடைக்கும், பெட்ரோல் பங்க் கிடைக்கும். வீட்டு சமையல் கேஸ் இணைப்பு கிடைக்கும், சிபாரிசில் வேலை கிடைக்கும்.

இதையும் படிங்க; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன..? முழு விவரம்..!

ஆனால் அதெல்லாம் அந்த காலம். இப்ப எம்.பிக்கு மரியாதையே இல்லை. எம்பினா-என்ன தம்பி என்கிறார்கள் அவ்வளவுதான் மரியாதை. எனவே, அனைவரும் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேரவேண்டும். நன்கு படிக்க வேண்டும்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலகலப்பாக பேசினார்

செய்தியாளர்: சிவக்குமார்

First published:

Tags: Local News, Madurai, Thol. Thirumavalavan, VCK