ஹோம் /நியூஸ் /மதுரை /

திருமண பத்திரிக்கை கொடுப்பதுபோல் வீட்டில் நுழைந்து கொள்ளை... எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து நகைகளை திருடி சென்றனர்

திருமண பத்திரிக்கை கொடுப்பதுபோல் வீட்டில் நுழைந்து கொள்ளை... எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து நகைகளை திருடி சென்றனர்

மேலூர் கொள்ளை

மேலூர் கொள்ளை

எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும் 11 சவரன் நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மேலூரில் பத்திரிக்கை கொடுப்பது போல் வந்து வீட்டின் உரிமையாளருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து நகைகளை கொள்ளையடித்தது சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு வாச்சம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், கீழவளவில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் அவரது மனைவி ஹேமலதா மகன், மகளுடன் வசித்து வருகின்றார்.நேற்று இரவு வீட்டில் ஹேமலதா தனியாக இருந்த போது, இளம்பெண்ணுடன் தம்பதிகளாக மூன்று பேர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

தன் பெயர் குமார் என்றும், கத்தார் நாட்டில் உங்கள் கணவருடன் பணிபுரிவதாகவும், மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வந்ததாக கூறி வீட்டிற்குள் வந்துள்ளனர். அப்போது, ஹேமலதாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட நிலையில், அவர் எதிர்பாராத நேரத்தில் ஹெமலதாவின் கை, மற்றும் வாயை டேப்பால் கட்டிப் போட்டுள்ளனர்.

பின்னர், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும் அவர் அணிந்திருந்த நகை, மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என 11 சவரன் தங்க நகைகளும், வெள்ளி கொலுசு மற்றும் 70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, ஹெமலதாவை வீட்டிற்குள்ளே வைத்து பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள உறவினர்கள் உதவியுடன் வெளியே வந்த ஹேமலதா இதுகுறித்து கீழவளவு காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோனி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து, பெண்ணிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தனிப்பட்ட அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Crime News, Madurai, Theft