மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி ஜனவரி 2வது வாரத்தில் நிறைவு பெறுகிறது.
மதுரையில் சர்வதேச தரத்தில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரை-புதுநத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2022 ஜனவரி 11ஆம் தேதி நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், புவியியல், உணவுமுறை, உளவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், வாழ்க்கை வரலாறு, பயணம், விவசாயம், சுற்றுச்சூழல்,அரிய நூல்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2.50 லட்சம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இந்த நூலகத்தில் இலவச வை-பை வசதி, எஸ்கலேட்டர், மின்சார லிப்ட் வசதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகள் உள்ளன. தரை தளத்தில், வரவேற்பு மண்டபம், தமிழ் கலாச்சாரம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவை உள்ளன. நூலகத்தின் கீழ் பகுதியில் 100 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு மகளிர் நிறுவனத்தில் 78 காலியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி
மொத்தம் ரூ.114 கோடியில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.99 கோடியும், புத்தகங்களுக்கு ரூ.10 கோடியும், கணினி உபகரணங்களுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, இரவு பகலாக உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து கட்டிடத்தை ஒப்படைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Tamil News