ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் கொள்முதல் நிலைய தற்காலிக பணியாளர்களுக்கான நேர்காணல் ரத்து- தேர்வர்கள் போராட்டம்

மதுரையில் கொள்முதல் நிலைய தற்காலிக பணியாளர்களுக்கான நேர்காணல் ரத்து- தேர்வர்கள் போராட்டம்

போராட்டத்தில் மக்கள்

போராட்டத்தில் மக்கள்

Madurai | மதுரையில் கொள்முதல் நிலையங்களுக்கான தற்காலிக பணியாளர்களுக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் உத்தரவின்படி நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இம்மையங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிக பருவகால உதவுபவர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் வரவேற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதற்கான நேர்காணல் தேர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு, விண்ணப்பத்தார்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

வாணிபக் கழக அறிவிப்பு 

இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று நடைபெற இருந்த நேர்காணல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக நுகர்வோர் வாணிப கழக அலுவலக வாசலில் விளம்பர பலகையை நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.

போராட்டத்தில் மக்கள்

இந்தநிலையில் தேர்வர்கள் அனைவரும் தனது நேர்காணல் தேர்விற்காக வந்திருந்த நிலையில் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் நுகர்வோர் வாணிபக் கழக அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai