துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு மதுரை காந்தி மியூசியத்தில் பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
துருக்கியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது துருக்கியில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு அமர்ந்திருப்பது காண்போரின் கண்களை குளமாக்குகின்றன.
துருக்கியில் கடந்த 36 மணி நேரமாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
துருக்கி நிலநடுக்கம் காரணமாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும்நிலையில் மீண்டும் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதில் இடிபாடுகளில் இருந்து மீண்ட பலரும் குழந்தைகள், தாய், தந்தை, மனைவி, கணவர், குடும்பத்தினர் என பலரையும் இழந்து தவித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது.
இந்த சம்பவம் பலரையும் நடுங்க வைக்கும் நிலையில், பல நாடுகளில் துருக்கியின் நிலை மாற வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரங்கில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Turkey Earthquake