ஹோம் /நியூஸ் /மதுரை /

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவிகள்.. 1 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட மதுரை போலீஸார்

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவிகள்.. 1 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட மதுரை போலீஸார்

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai News : மதுரையில் மாயமான பள்ளி மாணவிகளை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையை சேர்ந்த 2 மாணவிகள் அதேபகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், 2 மாணவிகளும் கல்வியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் 2 மாணவிகளை கண்டித்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த மாணவிகள் நேற்று பள்ளி விட்டு வீடு திரும்பவில்லை.  சந்தேகமடைந்த பெற்றோர் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார்  அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைத்து மாணவிகளை தேடிவந்தனர். அப்போது, 1 மணி நேரத்தில் மாணவிகள் இருவரும் மேலூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளை உடனடியாக மீட்டு அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல்போன ஒரு மணி நேரத்தில் மாணவிகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

First published:

Tags: Crime News, Local News, Madurai, School students