ஹோம் /நியூஸ் /மதுரை /

ஆபாச வீடியோ.. பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது!

ஆபாச வீடியோ.. பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது!

போக்சோவில் கைது

போக்சோவில் கைது

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் காதலன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை கார்த்திக் என்ற இளைஞர் காதலிப்பது போல நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நம்பவைத்த அவர், சிறுமியை பல முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கீரைத்துறையில் ஆள் இல்லாத இடத்திற்கு சிறுமியை கார்த்திக் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அவரது நண்பர்கள் மறைந்திருந்து செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமிக்கு வீடியோவை காட்டி மிரட்டி கார்த்திக் துணையோடு அவரது நண்பர்கள் ஆதி மற்றும் ஹரிஸ் ஆகியோர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கார்த்திக், ஆதி மற்றும் ஹரிஸ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

First published:

Tags: Gang rape, Madurai, Minor girl, POCSO case