ஹோம் /நியூஸ் /மதுரை /

கடை திறந்த முதல் வாரமே திருட்டா.. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் கைவரிசை காட்டிய பெண்கள்

கடை திறந்த முதல் வாரமே திருட்டா.. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் கைவரிசை காட்டிய பெண்கள்

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் கொள்ளை

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் கொள்ளை

Madurai | கடை திறப்பின் சிறப்பு சலுகையாக நகைக்கடையில் ஒரு பவுன் தங்க நகை வாங்கினால் ரூ.2000 சலுகை என விளம்பரம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட பிரபல நகைக்கடையில் ஐந்து பவுன் நகையை திருடி கைவரிசை காட்டிய  இரண்டு  பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த வாரம் சூப்பர் சரவண ஸ்டோர்ஸ்  கடை தொடங்கப்பட்டது. கடை திறப்பு விழாவை முன்னிட்டு முதல் வாரம் முழுவதும் ஒரு பவுன் தங்க நகைக்கு 2000 ரூபாய் சலுகைகள் வழங்கி விளம்பரம் செய்திருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் சலுகை தினத்தை முன்னிட்டு பெண்கள் கூட்டம் நகைக்கடையில் அலை மோதியது.

இதனை பயன்படுத்திக் கொண்ட சுமதி (50), பிரியதர்ஷினி (38) ஆகிய இரண்டு பெண்களும் நகைக்கடைகளில் உள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் போல் பார்க்க வந்து ஐந்து பவுன் தங்க நகையை திருடியுள்ளனர்.

சந்தேகம் அடைந்த கடையின் ஊழியர்கள் இரண்டு பெண்களையும் அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் நகையை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் மதுரை மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகார் அளித்து ஒப்படைத்தனர்.

செய்தியாளர்: வெற்றி, மதுரை.

First published:

Tags: Arrest, Crime News, Gold Theft, Local News, Madurai, Saravana stores