முகப்பு /செய்தி /மதுரை / சரவணா ஸ்டோரில் தீ விபத்து.. ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்.. அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!

சரவணா ஸ்டோரில் தீ விபத்து.. ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்.. அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!

சரவணா ஸ்டோர்

சரவணா ஸ்டோர்

Madurai saravana stores fire accident | மதுரை மாட்டுத்தாவணி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை சரவணா ஸ்டோரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. கீழ் தளத்தில் நகைக்கடையும், மேல் தளங்களில் ஜவுளி கடையும், அதற்கு மேல் உணவகங்களும் உள்ளன.

இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேல் வாடிக்கையாளர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது சிறுது நேரத்தில் பரவ தொடங்கி மளமளவென எரிந்தது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் 3 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர் கடையில் இருந்த வாடிக்கையாளர்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


First published:

Tags: Local News, Madurai, Saravana stores