மதுரையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை கரும்புகை வெளியேறிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட 10 மாடி கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் 9-வது தளத்தில் உள்ள உணவகத்தில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றிய நிலையில் உடனே கடையிலிருந்த மக்களும், ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மாட்டுத்தாவணி பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகளின் சுவாசத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை கரும்புகை வெளியேறி கொண்டிருந்த நிலையில் 6 தீயணைப்பு வாகனங்கள், மாநகராட்சி தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டு கரும்புகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ஹரி கிருஷ்ணன், மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Local News, Madurai, Saravana stores