ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் ரவுடியை வீடு புகுந்து படுகொலை செய்த மர்ம கும்பல்

மதுரையில் ரவுடியை வீடு புகுந்து படுகொலை செய்த மர்ம கும்பல்

ரவுடி படுகொலை

ரவுடி படுகொலை

Madurai Crime News : மதுரையில் நள்ளிரவில் வீடு புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தலைமறைவு ரவுடியை வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32). இவர் மீது சிப்காட், திருப்பாச்சேத்தி, இளையான்குடி , பூவந்தி, சிவகங்கை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன்காரணமாக அழகுபாண்டி எதிரிகளுக்கு பயந்து ஆந்திரா மாநிலத்தில் குடும்பத்துடன் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பாச்சேத்தி காவல்நிலைய வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று மதுரை வந்துள்ளார். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்கான்பட்டிக்கு வந்த 5பேர் கொண்ட கும்பல் அழகுபாண்டியை சரமாரியாக அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில் அழகுபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் உயிரிழந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீஸார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Madurai, Murder, Tamil News