Home /News /madurai /

Madurai | பராமரிப்பின்றி மணலால் மூடி கிடக்கும் முக்கிய சாலைகள்

Madurai | பராமரிப்பின்றி மணலால் மூடி கிடக்கும் முக்கிய சாலைகள்

மதுரை சாலைகள்

மதுரை சாலைகள்

Madurai News | மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் பராமரிப்பின்றி மணல் பரப்பினால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றது.

மதுரை மாவட்டம் தவிட்டு சந்தை, அழகப்பன் நகர், காமராஜர் சாலை உட்பட பல சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சாலையின் பெரும் பகுதி மணலால் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான மதுரையில் சாலையெங்கும் மணல் மூடப்பட்டு அகலமான சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகளாக காட்சியளிக்கின்றன. சாலையின் இரு ஓரங்களிலும் தேங்கி கிடக்கும் மணல் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து காரணமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதுவே பல முக்கிய சாலைகளான விளக்குத்தூன்-தெப்பக்குளத்தை இணைக்கும் காமராஜர் சாலை, திருப்பரங்குன்றம் - ஆரப்பாளையம் பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. சாலைகளில் மணல் சூழ்ந்ததன் காரணமாக பெரிய வாகனங்கள் செல்லும் பொழுது கடும் புழுதிக்காற்று வீசுகிறது. இது கார் மற்றும் பிற பெரிய வாகனங்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், மிதிவண்டியில் செல்பவர்களுக்கும், சாலையோரம் செல்பவர்களுக்கும் கண்களுக்குள் தூசி சென்று பெரிதும் இடையூராக உள்ளது.இவ்வாறு இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களுக்குள் தூசி சென்று அது பெரும் விபத்தையும், சேதத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தினமும் நடு இரவு வேளையில் சாலைகள் அனைத்தும் துப்புரவு பணியாளர்கள் மூலமாகவும், பல கருவிகள் கொண்டும் சுத்தம் செய்யப்படும். மதுரையில் இவ்வாறான பராமரிப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதனை கருத்தில்கொண்டு உடனடியாக சாலைகள் அனைத்தையும் துப்புரவு பணியாளர்களை கொண்டு மணல் பரப்பை நீக்கி சுத்தம் செய்யவேண்டும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாகவும், ஆதங்கமாகவும் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி