நேசமணி, பாடி சோடா, நாய் சேகர், வக்கீல் வண்டுமுருகன், கைப்புள்ள போன்ற திரைப்பட கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகத்தில் கொடி கட்டி பறந்தவர் 'வைகைப்புயல் வடிவேலு'. சினிமாவில் தான் கொடி கட்டி பறந்தார் என்றால் சோசியல் மீடியாக்களில் தனது ரியாக்ஷனால் மீம்களின் மூலம் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கின்றார்.
வடிவேலுவின் சினிமா டிராவலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கி சந்தோஷ் நாராயணன் இசையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் நாய் சேகர் ஆக வடிவேல் மட்டும் இன்றி குக் வித் கோமாளி சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் ஆகியோரும் நடித்து இருக்கின்றார்கள்.
நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பற்றி மதுரை மக்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம். இதுகுறித்து தெரிவித்த மக்கள், ‘வடிவேல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காமெடித்தான். ஆனால் வடிவேல் படத்தில் காமெடி எங்கே என்று நினைக்கும் அளவிற்கு திரைப்படம் இருந்தது என்றும் படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக நன்றாக உள்ளது.
செகண்ட் ஆப் சொல்லும் அளவிற்கு இல்லை. சிவாங்கி, கிங்ஸ்லி கேரக்டர்ஸ் நல்லா இருக்கிறது என்றும் வடிவேலின் பழைய காமெடிகளே அதிகமாக இடம்பெற்றுள்ளது என்றும் திரைப்படம் நன்றாக தான் உள்ளது. ஆனால் வடிவேலின் கம் பேக் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றும் தெரிவித்தனர். ஒருவர் புன்னகைத்துக் கொண்டே.. நோ கமெண்ட்ஸ்.. சிம்ப்ளி வேஸ்ட் என்று செந்தில் பாணியில் கமெண்ட் அடித்தார்.
வடிவேல் திரைப்படம் என்று தான் வந்தோம். ஆனால் இந்தப் படம் ஃபுல் பில் செய்யவில்லை. வடிவேலின் 23ஆம் புலிகேசி படத்தினைப் போல் படம் முழுவதும் காமெடி இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் வடிவேலின் பழைய காமெடிகளே படத்தில் இருக்கின்றது. வடிவேலின் ரியாக்ஷனுக்கு வேண்டுமென்றால் இந்த பழைய காமெடிகளை ரசிக்கலாம் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai