ஹோம் /நியூஸ் /மதுரை /

Palamedu Jallikattu | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

Palamedu Jallikattu | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Madurai Palamedu Jallikattu | மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் அவனியாபுரம், அலங்காநல்லூரை போன்று பாலமேடு ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. காலை 8 மணி முதல் மாலை 4 மனி வரை போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  700 காளைகளும், 150 போட்டியாளர்களும் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த எண்களின் அடிப்படையிலேயே காளைகள் அவிழ்க்கப்படும் என்றும், பார்வையாளர்களுக்காக கூடுதல் பார்வை மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த மாடுபிடி வீரர்கள் இரண்டு பேருக்கு கார்களும், சிறந்த காளைகளுக்கு, இருசக்கர வாகனம், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

First published:

Tags: Jallikattu, Palamedu