ஹோம் /நியூஸ் /மதுரை /

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. உறுப்பு தானம் மூலம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த நபர்.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. உறுப்பு தானம் மூலம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த நபர்.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரை உடல் உறுப்புகள் தானம்

மதுரை உடல் உறுப்புகள் தானம்

Madurai organs donate | மதுரையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு பலருக்கு பொறுத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai

  கோயம்புத்தூர் மாவட்டம் கருணை நகர் பகுதியைச் சேர்ந்த முத்து சங்கர் (28) என்ற இளைஞர் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி கோரிப்பாளையம் சந்திப்பின் அருகே சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இரவு மூளை சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

  இதனைத் தொடர்ந்து முத்து சங்கரின் சகோதரி சுசீலாதேவி தனது சகோதரரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தார்.

  ALSO READ | பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்... மதுரையில் சுவாரஸ்யம்

  இதையடுத்து, அவருடைய இருதயம் இரண்டு நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், கண்கள், தோல், எலும்பு ஆகிய 7 உறுப்புகள் சென்னை, திருநெல்வேலி, மதுரை மாவட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உறுப்புகள் தேவைக்காக காத்திருந்த நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன.

  15 நிமிடத்தில் இருதயம், நுரையீரலை மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே சிக்னல்களில் சில நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உடல் உறுப்புகள் விரைவாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமான மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Donate body parts, Madurai