முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் விலை குறைந்த வெங்காயம்.. எவ்வளவு தெரியுமா?

மதுரையில் விலை குறைந்த வெங்காயம்.. எவ்வளவு தெரியுமா?

வெங்காயம்

வெங்காயம்

Madurai onion price | மதுரை நெல்பேட்டைக்கு வரும் வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை விட பாதியளவு குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வமாக சென்று வாங்கி செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் வெங்காயத்தின் விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் அனைத்து வகையான சமையலிலும் முக்கிய பங்கு  வகிக்கிறது. தேனி மாவட்டம்  தேனி , ஆண்டிப்பட்டி, மற்றும்    தாராபுரம் , நாமக்கல்,  ராசிபுரம்  உள்ளிட்ட பகுதிகளில்  இருந்து மதுரை நெல் பேட்டை வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால்  விலை குறைந்துள்ளது.  இதே போல் மகாராஷ்டிராவில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின்  (பல்லாரி) வரத்தும் அதிகரித்துள்ளதால்  வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

சின்ன வெங்காயம்  ஒரு கிலோ  40 ரூபாய்க்கு (மொத்த விற்பனை) விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக  சின்ன வெங்காயம் ஒரு கிலோ  80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று  பெரிய வெங்காயம் ( பல்லாரி) 25 ரூபாய்க்கு  (மொத்த  விற்பனை ) விற்பனை செய்யப்படுகிறது .  கடந்த சில வாரங்களாக பெரிய வெங்காயம் கிலோ 40 வரை விற்பனையானது.

First published:

Tags: Local News, Madurai, Onion Price, Today market rate